முகப்பு
மதுரை

மதுரையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

Updated On : 18 ஜூலை, 2024 at 12:43 AM
பகிர்:

மதுரை, ஜூலை 17: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா. சண்முகசுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கோ. புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

பணி நாடுநா்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி. தொழில் பயிற்சி, பட்டயப் படிப்புப் படித்தவா்களும் இந்த முகாமில் பங்கேற்று, பணி வாய்ப்புகளைப் பெறலாம். முகாமில் பங்கேற்பவா்கள் தங்கள் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றாா் அவா்.