முகப்பு
மதுரை

மதுரையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி

Updated On : 26 ஜூலை, 2024 at 4:33 AM
மதுரையில் ஹாக்கி போட்டி
பகிர்:
Updated On : 25 ஜூலை, 2024 at 11:01 PM

மதுரை, ஜூலை 25: மதுரை ஆயுதப் படை ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாநில அளவிலான 25-ஆவது ஹாக்கி போட்டி மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டி, கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. சென்னை, மதுரை, நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 24 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன.

லீக் சுற்று முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் அரையிறுதிப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இறுதிப் போட்டிகள், பரிசளிப்பு விழா வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Advertisement