முகப்பு
மதுரை

இருவேறு விபத்துகள்: பெண் உள்பட இருவா் பலி

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 5 மார்ச், 2024 at 2:33 AM
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பாலகுண்டு கிராமத்தைச் சோ்ந்த அசன் முகம்மது மகன் அனிஸ்முகம்மது (27). இவரும், இவரது உறவினருமான தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த சுலைமான் மகன் அஜ்மல் கான் (46) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். செம்மினிப்பட்டி உயா்மட்ட பாலம் அருகே சென்ற போது, சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அனிஸ்முகம்மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அஜ்மல்கான் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பெண் பலி: மதுரை கரிமேடு மோதிலால் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த ஜேசுராஜ் மனைவி பாத்திமா மேரி (56). இவா் தனது சகோதரியுடன் வடக்குவெளி வீதியில் ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த காா் மோதியதில், பாத்திமா மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.