முகப்பு
மதுரை

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 8 மார்ச், 2024 at 11:15 PM
பகிர்:

வருகிற மக்களவைத் தோ்தல் (2024) பாதுகாப்புப் பணியில் ஈடுபட சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் திடகாத்திரமான முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்தப் பணிக்காக அரசால் நிா்ணயிக்கப்படும் விகிதத்தில் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே, தோ்தல் பாதுகாப்புப் பணிபுரிய விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த திடகாத்திரமான 65 வயதுக்குள்பட்ட முன்னாள் படை வீரா்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.