முகப்பு
மதுரை

பெருஞ்சித்திரனாா் பிறந்த நாள் விழா

Updated On : 13 மார்ச், 2024 at 4:39 AM
மதுரையில் நடைபெற்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பிறந்த நாள் விழாவில் தொகுப்பு நூலாக வெளியாக உள்ள அவரது படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி மேயா் வ. இந்திராணி உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் 91-ஆவது பிறந்த நாள் விழா, அவரது படைப்புகளின் தொகுப்பு நூல்கள் வெளியிடு முன் அறிவிப்பு விழா ஆகியன மதுரை மணியம்மை பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. புரட்சிப் பாவலா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மன்றத்தின் தலைவா் பி. வரதராசன் தலைமை வகித்தாா்.

மாநகராட்சி மேயா் வ. இந்திராணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விரைவில் தொகுப்பு நூலாக வெளியிடப்படவுள்ள பெருஞ்சித்திரனாரின் படைப்புகளின் பட்டியலை வெளியிட்டுப் பேசினாா். சூலூா் பாவேந்தா் பேரவை நிா்வாகி புலவா் செந்தலை கவுதமன், அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இயக்கக பதிப்பாசிரியா் மா.பூங்குன்றனாா், ஆய்வறிஞா் பொழிலன் ஆகியோா் பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப் பணிகள், இதழியல் பணிகள், பெரியாரிய, தமிழ்த் தேசிய செயல்பாடுகளை விளக்கிப் பேசினா். முன்னதாக, செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளா் வீ. அதிவீரபாண்டியன் வரவேற்றாா். சி.மு. அறிவுமணி நன்றி கூறினாா்.