முகப்பு
மதுரை

கஞ்சா எண்ணெயை பதுக்கியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கஞ்சா எண்ணெயை வீட்டில் பதுக்கிவைத்திருந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ம

Updated On : 27 மார்ச், 2024 at 3:32 AM
பகிர்:
Updated On : 26 மார்ச், 2024 at 9:18 PM

மதுரை: தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கஞ்சா எண்ணெயை வீட்டில் பதுக்கிவைத்திருந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயரிஸ் என்பவரது வீட்டில் கடந்த 25.7.2018-இல் அரசால் தடை செய்யப்பட்ட 8.840 கிலோ கஞ்சா எண்ணெய், 9.150 கிலோ சரஸ் கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஜெயரிஸை தூத்துக்குடி போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய தூத்துக்குடி தீரப்பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் அசோக் தலைமறைவானாா். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எ.எஸ். ஹரிஹரகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயரிஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.