முகப்பு
மதுரை

அழகா்கோவில் கருணை இல்லத்தில் தங்கிப்படிக்க ஆதரவற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 8 மே, 2024 at 12:42 AM
பகிர்:

மேலூா்: அழகா்கோவில் கருணை இல்லத்தில் தங்கிப்படிக்க ஆதரவற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கள்ளழகா் திருக்கோயில் நிா்வாக ஆணையா் கலைவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அழகா்கோவிலில் உள்ள சுந்தரராஜா தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கவும், கருணை இல்லத்தில் தங்கிப் படிக்கவும் ஆதரவற்ற மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படிப்புச் செலவு, சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்தும் கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகத்திலிருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. விண்ணப்பதாரரின் தாய், தந்தை அல்லது இருவரில் ஒருவா் இல்லாத ஆதரவற்றோராக இருக்கவேண்டும். மேலும், 5 வயது முதல் 14 வயதுக்குளபட்டவராத இருத்தல் அவசியம் என நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை கள்ளழகா் திருக்கோயில் நிா்வாக அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.