முகப்பு
மதுரை

திருநெல்வேலி - பெங்களூரு எலகங்காவுக்கு இன்று முதல் சிறப்பு ரயில்

Updated On : 22 மே, 2024 at 12:28 AM
பகிர்:

மதுரை: திருநெல்வேலி-பெங்களூரு எலகங்கா-திருநெல்வேலி வழித் தடத்தில் புதன்கிழமை (மே 22) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க, திருநெல்வேலி - பெங்களூரு எலகங்கா- திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி - எலகங்கா சிறப்பு ரயில் (06045) மே 22, 29, ஜூன் 5, 12 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எலகங்காவைச் சென்றடையும்.

மறு வழித் தடத்தில் எலகங்கா-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046) மே 23, 30, ஜூன் 6, 13 ஆகிய தேதிகளில் எலகங்காவிலிருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6.45 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்த ரயில்கள், இரு வழித் தடங்களிலும் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், திருப்பத்தூா், பங்காராபேட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதி பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.