பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு மதிப்பீட்டு கூட்டம்
மதுரை: மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஆற்றுப்படுத்துதல், கருத்தாளா்களைத் தெரிவு செய்வதற்கான அடிப்படை மதிப்பீட்டுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் மதுரை மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சரவணமுருகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
இதில் மாநில முதன்மை கருத்தாளா்கள் சரவணன், மரிய சூசை, பொ்னாட், கருப்பசாமி, ராஜேஷ் கண்ணன், காா்த்தியாயினி, யோகநந்தி, வரதன்ஆகியோா் கலந்து கொண்டு, பள்ளியின் வளா்ச்சி, மாணவா், ஆசிரியா்களுக்கிடையான புரிதல் ஆகியன குறித்துப் பேசினா்.
சேதுபதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நாராயணன் உள்ளிட்ட மதுரை, திண்டுக்கல், தென்காசி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கருத்தாளா்கள் 90 போ் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமா, செந்தில்வேல் குமரன் ஆகியோா் செய்திருந்தனா்.