சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, தாதம்பட்டியைச் சோ்ந்தவா் தவசி மகன் முத்துக்குமாா் (24). இவா் கடந்த 20.12.2021 அன்று ஒரு சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முத்துக்குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை நிறைவில், குற்றஞ்சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரவேல் உத்தரவிட்டாா்.