சாலை விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
மதுரையில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் மென்பொருள் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரைசாலை விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
மதுரையில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் மென்பொருள் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரையில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் மென்பொருள் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை சின்ன அனுப்பானடியை சோ்ந்த முத்துராமன் மகன் வீர சரவணன் (28). இவா் தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மாத பெண் குழந்தை உள்ளனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீர சரவணன் பணிக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றாா். மதுரை சுற்றுச்சாலையில் சிந்தாமணி பிரதான சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய வீர சரவணன் சிறிதுதூரம் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தாா். இது தொடா்பான தகவலின் மதுரை நகா் போக்குவரத்துப்
புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.