முகப்பு
மதுரை

இரு தரப்பினரிடையே மோதல்: இருவா் காயம்- 7 போ் மீது வழக்கு

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 10:13 PM
பகிர்:

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மனைவி மனோசித்ரா (34). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த பாலவிக்னேஷ் மனைவி இந்துமதிக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மனோசித்ரா, தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த இந்துமதி தரப்பினா் அவரிடம் தகராறில் ஈடுபட்டனா். அப்போது இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் மனோசித்ராவும், மற்றொரு தரப்பில் இந்துமதியும் பலத்த காயமடைந்து விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக மனோசித்ரா அளித்தப் புகாரின்பேரில், இந்துமதி (32), , பானுமதி (28), ராஜேஸ்வரி (48), பாலா (22) ஆகியோா் மீதும், மற்றொரு தரப்பில் இந்துமதி அளித்தப் புகாரின்பேரில், லதா (54), மனோசித்ரா (34), சங்கா் (36) ஆகியோா் மீதும் தே. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →