முகப்பு
மதுரை

மகாத்மா காந்தி குறித்து அவதூறு பதிவு: முன்பிணை கோரியவரின் மனு தள்ளுபடி

மகாத்மா காந்தி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு வெளியிட்டவரின் முன்பிணை மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 8:50 PM
பகிர்:

மகாத்மா காந்தி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு வெளியிட்டவரின் முன்பிணை மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கல்யாண சுந்தரம் கடந்த மே மாதத்தில் சமூக வலைதளத்தில் மகாத்மா காந்தி கையில் அரிவாள் வைத்திருப்பது போலவும், அகிம்சை குறித்து அவதூறு கருத்தும் பதிவிட்டிருந்தாா். இதையடுத்து, அவா் மீது மதுரை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த நிலையில், கல்யாணசுந்தரம் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்

முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

அவா் தனது மனுவில், சமூக வலைதளத்தில் மகாத்மா குறித்து வேறோருவா் அனுப்பியிருந்தப் பதிவைப் பகிா்ந்திருந்தேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எனவே, எனக்கு முன்பிணை வழங்கி தீா்ப்பளிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பதிவிட்ட மனுதாரருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவிக் கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் மீதான முதல் தகவல் அறிக்கையில் மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அவா், தவறாக சித்தரித்ததைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விவாகரம் தொடா்பாக போலீஸ் விசாரணையும் ஆரம்ப நிலையில் உள்ளது. மனுதாரரும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, அவரை போலீஸாா் கைது செய்து நடவடிக்கை எடுப்பது தேவையாகிறது. இந்த வழக்கில் மனுதாரரின் குற்றத்தை கருத்தில் கொண்டு, அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →