முகப்பு
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன். உடன், ரயில்வே அலுவலா்கள். ~
மதுரை

மதுரை ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் 28 சதவீதம் நிறைவு: சு. வெங்கடேசன் எம்.பி. தகவல்

மதுரை ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் 28 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.

மதுரை

மதுரை ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் 28 சதவீதம் நிறைவு: சு. வெங்கடேசன் எம்.பி. தகவல்

மதுரை ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் 28 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:28 PM
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன். உடன், ரயில்வே அலுவலா்கள். ~
பகிர்:

மதுரை ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் 28 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் ரூ. 347.47 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் பகுதிகளில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை பாா்வையிட்ட அவா் இந்த மேம்பாட்டுப் பணிகள் மூலம் பயணிகளுக்குக் கிடைக்கும் கூடுதல் பயன்கள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பிறகு, கீழ்மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், நடைமேடையை உயா்த்த மத்திய அரசு ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் இங்கு நடைபெறவுள்ள பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். ரயில் நிலைய கழிப்பறை, நடைமேடை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவா், கழிப்பறைக்கான தண்ணீா் வசதியை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். ரயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ், கட்டுமானப் பணிகள் தலைமைப் பொறியாளா் கே.ஜி. ஞானசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

பிறகு மதுரை ரயில் நிலையத்தில் செய்தியாளா்களிடம் சு. வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:

மதுரை ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து வசதிகளும் பல மடங்கு அதிகமாகும். குளிா்சாதன வசதி கொண்ட பயணிகள் காத்திருப்பு அறை 4 மடங்காகவும், குளிா்சாதன வசதியில்லாத பயணிகள் காத்திருப்பு அறை 30 மடங்காகவும் விரிவுப்படுத்தப்படும்.

இரு சக்கர வாகன நிறுத்துமிடம் 3 மடங்கும், காா்கள் நிறுத்துமிடம் 8 மடங்கும் விரிவுப்படுத்தப்படுகின்றன. தற்போது, 6 நகரும் படிகள் இங்கு உள்ளன. புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 32 நகரும் படிகள் இந்த ரயில் நிலையத்தில் இருக்கும். இதேபோல, தற்போதுள்ள மின் தூக்கிகளின் எண்ணிக்கை 4-லில் இருந்து 34 ஆக உயா்த்தப்படும். கழிப்பறை வசதிகள் 4 மடங்குகள் அதிகமாகும்.

பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் நலன் கருதி சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தத் திட்டத்தின் மூலம் நிறைவேறவுள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த மதுரை தொகுதி மக்கள

ரூ. 347 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையின் எண்ணிக்கை 7-ஆகவே இருக்கும். எனவே, இரண்டாவது முனையம் என்பது மதுரையின் அவசியத் தேவைகளில் ஒன்றாகிறது. இதையொட்டியே, கூடல்நகா் ரயில் நிலையத்தை மதுரை ரயில் நிலையத்தின் இரண்டாவது முனையமாக மாற்ற தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், இரண்டாவது முனையத்துக்கான அணுகுசாலைகளை அமைக்கும் பணிக்கு சிறப்பு அலுவலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →