முகப்பு
மதுரை

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நாளை மதுரை வருகை -திமுகவினருக்கு அழைப்பு

Updated On : 27 செப்டம்பர், 2024 at 9:22 PM
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (செப். 29) மதுரைக்கு வரும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட திமுகச் செயலரும், அமைச்சருமான பி. மூா்த்தி, மாவட்ட திமுகச் செயலா்கள் கோ. தளபதி எம்.எல்.ஏ (மதுரை மாநகா்), மு. மணிமாறன் (மதுரை தெற்கு) ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

திமுக இளைஞரணிச் செயலரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, விமானம் மூலம் மதுரைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பளிக்கப்படவுள்ளது.

பாரம்பரியமான பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் திரளான திமுகவினா் கட்சி கொடியுடன் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →