முகப்பு
மதுரை

அரசு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் ரூ. 7 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பொங்கல் போனஸாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:37 PM
பகிர்:

தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பொங்கல் போனஸாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை : மத்திய அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியா்கள், ஆசிரியா்கள் ரூ.7000 பொங்கல் போனஸாக பெற்று வருகின்றனா்.

ஆனால், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநில அரசின் இந்தப் பாரபட்சமான நிலை ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மத்தியில் வருத்தமளிப்பதாக உள்ளது.

எனவே, தமிழக அரசு ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸாக வழங்க வேண்டும். நிகழாண்டு முதல் அதற்கான அரசாணையை வெளியிட்டு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →