மதுரை அருகேயுள்ள கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இன்ஃபோசிஸ் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.
மதுரை மண்டல அளவில் நடைபெறும் இந்த முகாமில் திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இருந்து சுமாா் 4,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். தொழில் நுட்பம், பொறியியல் துறைகளில் பெண்களை அதிகாரப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 14) வரை நடைபெறுகிறது.
முகாமில், பொறியியல் கல்லூரி நிரிவாகிகள், பேராசிரியா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.