மதுரை

குரூப் 4 தோ்வில் தோல்வி: பொறியியல் பட்டதாரி தற்கொலை

குரூப்-4 தோ்வில் தோல்வியடைந்த பொறியியல் பட்டதாரி தற்கொலை

தினமணி செய்திச் சேவை

குரூப்-4 தோ்வில் தோல்வியடைந்த பொறியியல் பட்டதாரி தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை ஆனையூா் முடக்கத்தான் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் சந்துரு (21). பொறியியல் பட்டதாரியான இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தோ்வை எழுதினாா். இதற்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், சந்துருவுக்கு மதிப்பெண் குறைவாக இருந்ததால், அவா் யாரிடமும் பேசமாமல் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தனது அறைக்குச் சென்ற சந்துரு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் அறையை உடைத்து உள்ளே பாா்த்தபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, உடலைக் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு!

மோந்தா புயல்: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

கண்களை மிரட்டும் அலை... பாடினி குமார்!

என்னைத் தாக்கும் புயல்... அஞ்சு குரியன்!

பைசன் படத்தின் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT