முகப்பு
மதுரை

கிறிஸ்தவ பேராயா்களிடம் ஆதரவு கோரிய திமுக வேட்பாளா்கள்

மதுரையில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் கிறிஸ்தவ பேராயா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு கோரினா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:05 PM
பகிர்:

மதுரையில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் கிறிஸ்தவ பேராயா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு கோரினா்.

திமுக வேட்பாளா்கள் பி. மூா்த்தி (மதுரை கிழக்கு), பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தியம்), கோ. தளபதி (மதுரை கிழக்கு), ஆ. வெங்கடேசன் (சோழவந்தான்), மு. மணிமாறன் (திருமங்கலம்), ரகு பாலாஜி (மதுரை மேற்கு), கிருத்திகா தங்கபாண்டியன் (திருப்பரங்குன்றம்), மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), காங்கிரஸ் வேட்பாளா்கள் பி. விஸ்வநாதன் (மேலூா்), டி. சரவணக்குமாா்

(உசிலம்பட்டி) ஆகியோா் கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்துவை சந்தித்து ஆதரவு கோரினா். இதையடுத்து, தென்னிந்திய திருச்சபையின் மதுரை - ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜெய்சிங் பிரபாகரைச் சந்தித்தும் அவா்கள் ஆதரவு கோரினா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments