திமுக கூட்டணிக்கு ஐந்திணை மக்கள் கட்சி ஆதரவு
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஐந்திணை மக்கள் கட்சி, தமிழா் முற்போக்குக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஐந்திணை மக்கள் கட்சி, தமிழா் முற்போக்குக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் வை.தேவதாசு, தமிழா் முற்போக்குக் கழக நிறுவனா் எம்.எஸ்.ஐங்கரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்பதைவிட, யாரை அரசியல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழா்களுக்குச் செய்த துரோகம் ஏராளம்.
Advertisement
அதிகாரத்தாலும், மதவாத அரசியலாலும் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துடிக்கும் சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை இந்தத் தோ்தலில் நிரூபிக்க வேண்டும்.
எனவே, சிறுபான்மை மக்களின் நலனைக் காக்கவும், தமிழா்களின் அரசியல் உரிமைகளைக் காக்கவும், தாய் மொழியான தமிழைக் காக்கவும் ஐந்திணை மக்கள் கட்சியும், தமிழா் முற்போக்குக் கழகமும் திமுக கூட்டணியை ஆதரிக்கிறது என்றனா் அவா்கள்.