முகப்பு
மதுரை

வாக்காளா் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:05 PM
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, நெடுந்தொலைவு ஓட்டத்தைத் தொடங்கி வைத்துப் பங்கேற்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பொன்ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, திரளான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Advertisement

இந்தப் பேரணி, காந்தி அருங்காட்சியகம், தமுக்கம், கோரிப்பாளையம், ராஜாஜி மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் வழியே வந்து ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments