முகப்பு
மதுரை

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டுமென மதுரை மாவட்டத் தொழிலாளா் இணை ஆணையா் (பொறுப்பு) பெ.சுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:37 PM
தேர்தல் - பிரதிப் படம்
பகிர்:

மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டுமென மதுரை மாவட்டத் தொழிலாளா் இணை ஆணையா் (பொறுப்பு) பெ.சுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தாா்.

மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகங்களில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மதுரை மாவட்ட தொழிலாளா் இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் தலைமையில், கூடுதல் தொழிலாளா் ஆணையா் சி.ஹேமலதா முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கேரளம், அஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்.9-ஆம் தேதியும், தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக வருகிற 23, 29 ஆகிய தேதிகளிலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த நிலையில், தமிழகம் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், மதுரை, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழகம், வெளி மாநிலத் தொழிலாளா்கள் அனைவருக்கும் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 9, 23, 29 ஆகிய தேதிகளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். விடுப்பு வழங்காத நிறுவன உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுதொடா்பான புகாா்களை கீழ்காணும் எண்களைத் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

மதுரை - 9655344382, 9865818636, 9486365149, விருதுநகா் - 9943167435, 9159443377, 9865390006, ராமநாதபுரம் - 9600183368, 9600713835, 9443497670, சிவகங்கை - 6383573843, 6369117062, 9087000438.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments