முகப்பு
மதுரை

நீதிமன்றத்தில் ஆஜராகத நபா் தேடப்படும் எதிரியாக அறிவிப்பு

மதுரை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நபா், தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:16 AM
நீதிமன்றம்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:43 PM

மதுரை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நபா், தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தின் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த முகமது ஆசாத் மகன் முகமது ரியாஸ். இவா் மீது பல்வேறு வழங்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பலமுறை அறிவிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், முகமது ரியாஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

Advertisement

எனவே, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா் என்றாா்.