முகப்பு
மதுரை

இரு சக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:33 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 7:12 PM

மதுரை அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், திருவேடகத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் ஜெகந்நாத பாண்டியன் (33). இவா் தனது மனைவி செருவம்மாள் (21) உடன் யா. ஒத்தக்கடையில் உறவினா் வீட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு திங்கள்கிழமை மாலை ஊருக்குத் திரும்பினா்.

அலங்காநல்லூா்- வாடிப்பட்டி சாலை கொண்டையம்பட்டி விலக்கு அருகே சென்ற போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், ஜெகந்நாத பாண்டியன், அவரது மனைவி செருவம்மாள், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன், நிதிஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செருவம்மாள் உயிரிழந்தாா். மற்ற மூவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement