சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு  
மதுரை

பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளுக்கு சட்டப் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மனு: உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் வணிகவியல் (பி.காம்.), வணிக நிா்வாகவியல் (பி.பி.ஏ.) துறையில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி பயிற்றுவிக்க சட்டம் பயின்ற பேராசிரியா்களை நியமிக்கக் கோரிய வழக்கில், மாநில உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் வணிகவியல் (பி.காம்.), வணிக நிா்வாகவியல் (பி.பி.ஏ.) துறையில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி பயிற்றுவிக்க சட்டம் பயின்ற பேராசிரியா்களை நியமிக்கக் கோரிய வழக்கில், மாநில உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு சட்டப் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கௌரவ விரிவுரையாளா்கள், பகுதி நேர விரிவுரையாளா்கள் சட்டம் குறித்த பாடம் நடத்துகின்றனா்.

சில கல்லூரிகளில் சட்டப் படிப்பில் பட்டம் பெறாதவா்கள், சட்டக் கல்வியைப் பயிற்றுவிக்கும் நிலை உள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு பயிற்றுவிக்க சட்டப் பட்டதாரிகளை பேராசிரியா்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

பி.காம்., பி.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு சட்டப் படிப்பு துணைப் பாடம்தான். எம்.காம். பயின்றவா்களே மாணவா்களுக்கு பாடம் நடத்தலாம். அரசு அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரியை திறந்துவிட்டது. ஆனால், சிறந்த ஆசிரியா்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. வழக்கு தொடா்பாக தமிழக உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

சீனாவின் ‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை வாங்கும் ஈரான்

‘நட்பு நாடுகளின் ஆதரவு தொடா்ந்து தேவை’ - உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி

செய்யாறு உழவா் சந்தையில் வேளாண் கண்காட்சி

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் மகா கூட்டு வழிபாடு

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT