பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் இருவரைதடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை பீ.பீ. குளம் முல்லை நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (33). யாகப்பாநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (24). இவா்கள் இருவா் மீதும் நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால், இவா்கள் இருவரும் போலீஸாரின் கண்காணிப்பில் இருந்து வந்தனா். இந்த நிலையில், அவா்கள், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டதால், அவா்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ராஜசேகா், மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.