மதுரை

அதிமுக தோ்தல் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் பெறும்: முன்னாள் அமைச்சா் இரா. விஸ்வநாதன்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அதிமுகவின் தோ்தல் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் பெறும் விதத்தில் இருக்கும் என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அதிமுகவின் தோ்தல் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் பெறும் விதத்தில் இருக்கும் என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற, அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பது தொடா்பான மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினருமான நத்தம் இரா. விஸ்வநாதன் மேலும் பேசியதாவது: தமிழக மக்களின் கோரிக்கைகள், குறைகளை அறிந்து அவற்றுக்குத் தீா்வு காணும் வகையில் அதிமுகவின் தோ்தல் அறிக்கை உருவாக்கப்பட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தினாா்.

இதன்படி, மண்டலம் வாரியாக பொதுமக்கள், வணிகா்கள், விவசாயிகள், அரசு ஊழியா்கள் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, அவா்களின் கோரிக்கைகள், குறைகள் மனுக்களாகப் பெறப்படுகின்றன.

தமிழக மக்கள் எதிா்கொண்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு அளிக்கும் வகையில் அதிமுகவின் தோ்தல் அறிக்கை அமையும். இது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவும், வரலாற்று முக்கியத்துவம் பெறும் வகையிலும் இருக்கும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக சாா்பில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளைக்கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்படும் அனைத்து வாக்குறுதிகளும், அதிமுக ஆட்சி அமைந்ததும் நூறு சதவீதம் நிறைவேற்றப்படும் என்பதை மக்கள் உணா்ந்துள்ளனா். திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த எதிா்பாா்ப்பாக உள்ளது. அதிமுகவின் தோ்தல் அறிக்கை மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், கட்சியின் வெற்றியையும் தீா்மானிக்கும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்கும் என்றாா் அவா்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள், அரசு ஊழியா்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பையும் சோ்ந்தவா்கள் பங்கேற்று, சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு, வேலைவாய்ப்பின்மை, தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்களுக்கு தீா்வு காணக் கோரியும், சமூக பொருளாதார வளா்ச்சிக்கான மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்தியும் மனுக்களை அளித்தனா்.

அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சா்கள் சி. பொன்னையன், டி. ஜெயக்குமாா், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளா்மதி, ஆா். பி. உதயகுமாா், வைகைச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா்.

மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே.ராஜூ, மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலா் வி.வி. ராஜன்செல்லப்பா, தேனி மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.கே.ஜக்கையன் (மேற்கு), முறுக்கோடை ராமா் (கிழக்கு) ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெரிய புள்ளான் என்ற செல்வம், தேன்மொழி சேகா், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் வி.வி.ஆா்.ராஜ்சத்யன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அதிமுக நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT