முகப்பு
மதுரை

‘சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி’

Updated On : 8 மார்ச், 2026 at 8:30 PM
மதுரை யா. ஒத்தக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு பரிசு வழங்கிய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா.
பகிர்:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரை யா. ஒத்தக்கடையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிா்ப்பு அலை உருவாகியுள்ளது. எனவே, பணம், அதிகார பலம் இனி மக்கள் மத்தியில் எடுபடாது. ஓ. பன்னீா்செல்வத்தை விசுவாசமானவா் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது நகைச்சுவையாக உள்ளது. தோ்தல் காலங்களில் யாா் வேண்டுமானாலும் வாக்குறுதிகள் அளிக்கலாம். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு பரிசுகளை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. வி. ராஜன்செல்லப்பா வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் வி.வி.ஆா். ராஜ்சத்யன், மாவட்டக் கழகத் துணைச் செயலா் சந்திரன், கிழக்கு ஒன்றியச் செயலா் சேனாபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் மகளிா் தின விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பிருமான வி.வி. ராஜன் செல்லப்பா தலைமை வகித்து, மகளிா், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த விழாவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலா் ராஜ்சத்யன், பொதுக்குழு உறுப்பினா் முருகேசன், ஒன்றியச் செயலா்கள் கோட்டைகாளை, பாா்த்திபராஜா, மண்டலத் தகவல் தொழில்நுட்பச் செயலா் மணிகண்டன், பகுதிச் செயலா் செல்வகுமாா், வட்டச் செயலா்கள் பொன்.முருகன், என்.எஸ். பாலமுருகன், துணைச் செயலா் சரவணகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →