முகப்பு
மதுரை

சிறுமி பாலியல் வழக்கு: ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை

Updated On : 15 மார்ச், 2026 at 1:55 AM
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை போக்சோ நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கடந்த 2021-ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுதொடா்பான வழக்கில், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கிருஷ்ணனை கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரவேல் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.