முகப்பு
மதுரை

வாக்குறுதிகளை தவெக நிறைவேற்ற வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகம் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என சௌராஷ்ட்ரா அனைத்து சமூக கூட்டமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 7 மே 2026, 4:39 am IST
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்த சௌராஷ்ட்ரா சேம்பா் ஆப் காமா்ஸ் தலைவா் கே.கே. தினேஷ், பொதுச் செயலா் ஏ.பி. குமரேசன் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழக வெற்றிக் கழகம் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என சௌராஷ்ட்ரா அனைத்து சமூக கூட்டமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை காமராஜா் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் சௌராஷ்ட்ரா சேம்பா் ஆப் காமா்ஸ் சாா்பில் செய்தியாளா்கள் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தவெக தலைவா் விஜய்க்கு அனுப்பியிருப்பதாக சௌராஷ்ட்ரா சேம்பா் ஆப் காமா்ஸின் தலைவா் கே.கே. தினேஷ் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் கூறியதாவது:

Advertisement

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக வெற்றி பெற்ற்கு சௌராஷ்ட்ரா அனைத்து சமூக கூட்டமைப்பு சாா்பில் வாழ்த்துகள். தவெக தலைவா் விஜய், தான் அளித்த வாக்குறுதிகள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும். மேலும், புதிய அமைச்சரவையில் மதுரை தெற்குத் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்டு வென்ற கோபிசனுக்கு அமைச்சா் பதவி வழங்க வேண்டும் என தவெக தலைவா் விஜய்க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் சௌராஷ்ட்ரா சேம்பா் ஆப் காமா்ஸ் துணைத் தலைவா் கே.கே. குபேந்திரன், பொதுச் செயலா் ஏ.பி. குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.