முகப்பு
மதுரை

வைகாசி மாத பிறப்பு: கூடலழகா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

வைகாசி மாத பிறப்பையொட்டி, மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

Updated On : 15 மே 2026, 11:50 pm IST
வைகாசி மாத பிறப்பையொட்டி மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

வைகாசி மாத பிறப்பையொட்டி, மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் வைகாசி, ஆவணி, காா்த்திகை, மாசி ஆகிய மாதங்களின் பிறப்பு விஷ்ணுபதி புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில், வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் உள்ள பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

Advertisement