ராமநாதபுரம்

தடகளம்: பரமக்குடி பள்ளி மாணவர்கள் மண்டல போட்டிக்கு தேர்வு

DIN

பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று மண்டலப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கே.என்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 17-வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கார்த்தீஸ்வரன் ஈட்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்றார். உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கிருஷ்ணகண்ணன் இரண்டாம் இடம் பெற்றார்.
மாணவிகள் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் சர்மிளா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். மாவட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மண்டலப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் வின்சென்ட் ஆகியோரை பள்ளியின் தாளாளர் எஸ்.சுந்தரேசன், பொருளாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், பள்ளியின் முதல்வர் பி.மகாதேவன், நிர்வாக அலுவலர் மருது ஆசிரியர், பள்ளி துணை முதல்வர் பிரேமலதா ஆகியோர் பாராட்டி கெளரவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT