ராமநாதபுரம்

பாம்பன் மீனவர்கள் 5-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

DIN

பாம்பன் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வெளியேற வேண்டும் என, 5 ஆவது நாளாக வியாழக்கிழமையும் பாம்பன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து, பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மீன்வளத்துறை அதிகாரிகள் முயன்றும் பலனில்லை. 
     இதனால், பாம்பன் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. 5 ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்த இந்த வேலை 
நிறுத்தப் போராட்டம், ராமேசுவரம் விசைப் படகுகள் பாம்பன் துறைமுகத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே விலக்கிக் கொள்ளப்படும் என, பாம்பன் விசைப் படகு மீனவச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடல் சீற்றம் காரணமாக விசைப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் இரவு பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT