ராமநாதபுரம்

ராமேசுவரம் அருகே 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

ராமநாதபுரம் அருகேயுள்ள பெரியபட்டினத்தில் 25 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தவரை, வனத் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
      பெரியபட்டினம் தர்கா தெருவில் வசித்து வருபவர் அஜீஸ் மகன் கரீம் (45). இவரது வீட்டில், இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர் பாட்ஷாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
    அதன்பேரில், சம்பவ இடத்துக்கு கீழக்கரை காவல் துறையினருடன் வனத் துறையினரும் இணைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் 25 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 
 அவற்றை  வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். போலீஸார் கரீமை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT