கடலில் மூழ்கி மீனவர் சாவு
திருவாடானை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திருவாடானை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திருவாடானை அருகேயுள்ள தொண்டி மகாசக்திபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கப்பன்(55). இவருடைய மகன் சஞ்சீவிராமன்(36). இவரது மாமா குமார்(45), தாத்தா முருகானந்தம் (60) ஆகியோர் புதன்கிழமை இரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அதிக கடல் சீற்றம் காரணத்தால் படகில் இருந்து சஞ்சீவி ராமன் தவறி விழுந்தாராம். அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்து கடலோர காவல் படை சார்பு ஆய்வாளர் காசி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.