ராமநாதபுரம்

கமுதி அருகே 13 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகக் கட்டடங்கள்

DIN

கமுதி அருகே சீமனேந்தல், அரியமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகக் கட்டடங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பயனற்று சேதமடைந்த நிலையில் உள்ளன.
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளுக்கும் கடந்த 2004-2005 ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டம் வளர்ச்சி முகாம் சார்பில் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, கிராம நிர்வாக அலுவலகக் கட்டடம் புதிதாகக் கட்டித் தரப்பட்டது.  ஆனால், தற்போது ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்களைத் தவிர, பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று பணியாற்ற தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், அரசுப் பணம் வீணடிக்கப்பட்டிருப்பதுடன், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உபயோகமின்றி உள்ளது.  தற்போது, சீமனேந்தல், அரியமங்கலம் பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கமுதி, பெருநாழி, அபிராமம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் வாடகைக் கட்டடங்களில் தங்கி, பணியாற்றி வருகின்றனர்.    
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் விவசாயிகள்  தங்களுக்கு தேவையான பட்டா, பிறப்பு, இறப்பு, பயிர் காப்பீடு, வறட்சி உள்ளிட்ட  சான்றுகளை பெற 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தேடிச் செல்லவேண்டிய நிலை உள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக   அலுவலர்கள் அனைவரையும் தங்கள் பகுதிக்குச் சென்று பணியாற்றிட உத்தரவிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT