ராமநாதபுரம்

குடிநீர் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
  ராமநாதபுரம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்து, 92 பயனாளிகளுக்கு ரூ.53,66,859 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியது:             இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 121 முன் மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு தீர்வும் காணப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையை போக்க ரூ.1,531.77 லட்சம் மதிப்பில் 1,061 பணிகளை செயல்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இவற்றில், இதுவரை 831 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  புதிய உறைக்கிணறுகள் வெட்டுதல்,பழைய கிணறுகளை ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளை
செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் எனவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
  முகாமில், ராமநாதபுரம் கோட்டாட்சியர்(பொறுப்பு)அமிர்தலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசகன், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் பா.மாரியம்மாள்,சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன்,கீழக்கரை வட்டாட்சியர் இளங்கோ உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT