இளமனூர் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் அருகே இளமனூரில் அமைந்துள்ள விநாயகர் கோயில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே இளமனூரில் அமைந்துள்ள விநாயகர் கோயில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலையில் 2 -ஆவது கால யாக சாலை பூஜைகள் நடந்து
முடிந்த பின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மூலவரான விநாயகர், பரிவார தெய்வங்களான பாலமுருகன், துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன.
மூலவர் விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின்னர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
இரவு சிவ தத்துவம் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினரும், இளமனூர் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.