பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்தது "பைலட்' கப்பல்
பாம்பன் தூக்குப்பாலம் வழியாக மும்பையில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹால்டியா துறைமுகத்திற்கு வழிகாட்டும் கப்பல் சென்றது.
ராமநாதபுரம்பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்தது "பைலட்' கப்பல்
பாம்பன் தூக்குப்பாலம் வழியாக மும்பையில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹால்டியா துறைமுகத்திற்கு வழிகாட்டும் கப்பல் சென்றது.
பாம்பன் தூக்குப்பாலம் வழியாக மும்பையில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹால்டியா துறைமுகத்திற்கு வழிகாட்டும் கப்பல் சென்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மற்றும் படகுகள் கடந்து செல்ல வசதியாக தூக்குப்பாலம் உள்ளது. கப்பல் கடக்கும்போது பாலம் இரண்டாகப் பிரிந்து மேல்நோக்கித் திறந்து வழிவிடும் வகையில் இதன் அமைப்பு உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மும்பையில் இருந்து பெரிய கப்பல்களுக்கு வழிகாட்டும் பைலட் கப்பல் பாம்பன் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
இதனையடுத்து, பாம்பன் தூக்குப்பாலத்தைக் கடந்து செல்ல பாம்பன் துறைமுகத்திடம் அனுமதி கோரப்பட்டு அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டது. கப்பல் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை பாம்பன் ரயில் தூக்குபாலம் திறக்கப்பட்டது. அதை பைலட் கப்பல் கடந்து சென்றது. இதனை ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.