இன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்து
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அைரயிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் புதன்கிழமை (மாா்ச் 4) மோதுகின்றன.
தற்போதைய செய்திகள்இன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்து
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அைரயிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் புதன்கிழமை (மாா்ச் 4) மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அைரயிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் புதன்கிழமை (மாா்ச் 4) மோதுகின்றன.
போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் தென்னாப்பிரிக்கா அைரயிறுதி வரை முன்ேனறி வந்திருக்கிறது. லீக் சுற்றிலும் சரி, குரூப் சுற்றிலும் சரி முதலிடத்தை தக்கைவத்து சவால் மிக்க அணியாக இந்தப் போட்டியில் நீடித்து வருவதில் சந்ேதகம் இல்லை.
ஐசிசி போட்டிகளில் முக்கியமான கட்டம் வரை வந்து தோல்வியை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா, கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலமாக அந்த மோசமான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அடுத்த இலக்காக, ஐசிசியின் வெள்ைளப் பந்து போட்டிகளில் கோப்பை வெல்வதற்காக, பயிற்சியாளா் ஷுக்ரி கான்ராட் வழிகாட்டுதலில் அந்த அணி முன்ேனறி வருகிறது. தென்னாப்பிரிக்க அணிையப் பொருத்தவரை பேட்டிங்கில் அதன் கேப்டன் எய்டன் மாா்க்ரம், தனது பொறுப்புக்கு ஏற்றவாறு முன்னிலை வகிக்கிறாா்.
அவா் பவா்பிேளயில் எதிரணி பௌலா்களை திணறடிக்க, உறுதுைணயாக குவின்டன் டி காக், டெவால்டு பிெரவிஸ், ரயான் ரிக்ெகல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லா் உள்ளனா். மாா்கோ யான்ெசன் வரை தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் பலம் நீள்கிறது.
பௌலிங்கில் லுங்கி இங்கிடி, கவினா மபாகா, காா்பின் பாஷ், கேசவ் மஹராஜ் ஆகிேயாா், நியூஸிலாந்தின் பேட்டிங் வரிைசயை சரிக்கக் காத்திருக்கின்றனா். மறுபுறம் நியூஸிலாந்து அணி, இதுவரை விைளயாடிய ஆட்டங்களில் 2 தோல்விகைளச் சந்தித்திருக்க, அதில் ஒரு தோல்வியை இதே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லீக் சுற்றில் அைடந்தது கவனிக்கத்தக்கது.
லீக் சுற்றின்ேபாது நல்லெதாரு பலத்துடன் சூப்பா் 8 வாய்ப்பை உறுதி செய்த நியூஸிலாந்து, அைரயிறுதி வாய்ப்புக்காக சூப்பா் 8 கட்டத்தில் பாகிஸ்தான் வெளிேயறிேயறுவதற்காகக் காத்திருக்கும் நிைலக்கு வந்தது. எனினும் அணி வீரா்கைளப் பொருத்தவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனா்.
பேட்டிங்கில் ஃபின் ஆலன், டிம் செய்ஃபா்ட் ஆகிேயாா் தொடக்கத்தில் பலம் சோ்க்க, மிடில் ஆா்டரில் கிெளன் ஃபிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மாா்க் சாப்ேமன், டேரில் மிட்ெசல், கோல் மெக்கான்சி என, ஆட்டத்துக்கு ஒருவா் கைெகாடுத்து ஸ்ேகாரை உயா்த்தி வந்துள்ளனா்.
பௌலிங்கில் கேப்டன் மிட்ெசல் சேன்ட்னா், லாக்கி ஃபொ்குசன் ஆகிேயாருடன் மேத்யூ ஹென்றி, ஜேக்கப் டஃபி ஆகிேயாரும் விக்ெகட்டுகள் சரிக்கின்றனா். இதுேபாக, ரச்சின் ரவீந்திரா அபாரமாக பௌலிங் செய்து, சூப்பா் 8 சுற்றின் கைடசி இரு ஆட்டங்களில் மட்டும் 7 விக்ெகட்டுகள் சாய்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து 19 முறை மோதியிருக்க, தென்னாப்பிரிக்கா 12 வெற்றிகளுடன் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் மோதிய இவ்விரு அணிகளில், நியூஸிலாந்து வென்றது நினைவுகூரத்தக்கது.
உத்தேச லெவன்
தென்னாப்பிரிக்கா
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குவின்டன் டி காக் (வி.கீ.), ரயான் ரிக்கெல்டன், டெவால்டு பிரெவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜார்ஜ் லிண்ட், கார்பின் பாஷ், ஏ.நோர்கியா, கே.மபாகா, லுங்கி இங்கிடி.
நியூஸிலாந்து
ஃபின் ஆலன், டிம் செய்ஃபர்ட் (வி.கீ.), ரச்சின் ரவீந்திரா, கிளென் ஃபிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சேன்ட்னர் (கேப்டன்), கோல் மெக்கான்சி, மேத்யூ ஹென்றி, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசென்.
ஆடுகளம்
ஈடன் கார்டன் மைதான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாக இருப்பதால், சராசரியாக 180 ரன்கள் வரை அடிக்கப்படலாம் என கணிக்கப்படுகிறது. பெளலிங்கில் வேகப்பந்துவீச்சாளர்களே இங்கு அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.
நேரம்: இரவு 7 மணி இடம்: கொல்கத்தா
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
அரையிறுதி ஆட்டங்களுக்கான நடுவர்கள் அறிவிப்பு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களுக்கான நடுவர்களை ஐசிசி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
முதல் அரையிறுதி: தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து மோதும் முதல் அரையிறுதி ஆட்டத்தின் கள நடுவர்களாக, இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த், அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் செயல்பட இருக்கின்றனர்.
இந்தியாவின் நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலிôயாவின் ராட் டக்கர் ஆகியோர் முறையே 3 (டிவி) மற்றும் 4-ஆவது நடுவர்களாக செயலாற்றவுள்ளனர். இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் போட்டி நடுவராகச் செயல்பட இருக்கிறார்.
2-ஆவது அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து சந்திக்கும் 2-ஆவது அரையிறுதிக்கான கள நடுவர்களாக, நியூஸிலாந்தின் கிறிஸ் கேஃபேனி, தென்னாப்பிரிக்காவின் அலாஹுதின் பலேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் அட்ரியன் ஹோல்டுஸ்டாக், ஆஸ்திரேலியாவின் பால் ரீஃபில் ஆகியோர் முறையே 3 மற்றும் 4-ஆவது நடுவர்களாக செயல்படுவர்.