ஆஷஸ் 2027 தொடர்: அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் 2027 தொடருக்கான அட்டவணை குறித்து...
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் 2027 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
கடைசியாக நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அந்த வெற்றியின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸி. முன்னேறியது.
டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சுவாரசியம் மிகுந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தனியான் ரசிகர்கள் கிரிக்கெட் உலகில் இருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
இந்தத் தொடர் அடுத்ததாக 2027ல் நடக்கிறது. இதனை இங்கிலாந்து நடத்துகிறது. முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் திடலில் நடக்கிறது. அந்தப் போட்டி ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற இருக்கிறது.
முதல்போட்டி: டிரெண்ட் பிரிட்ஜ் - ஜூன் 18 முதல் 22
இரண்டாவது போட்டி: லார்ட்ஸ் - ஜூன் 30 முதல் ஜூலை 4
மூன்றாவது டெஸ்ட்: எட்ஜ்பாஸ்டன் - ஜூலை 8 முதல் ஜூலை 12
நான்காவது டெஸ்ட்: சௌதாம்டான் - ஜூலை 21முதல் ஜூலை 25
ஐந்தாவது டெஸ்ட்: தி ஓவல் - ஜூலை 29 முதல் ஆக.2
மகளிருக்கான ஆஷஸ் தொடரும் ஆடவருக்கான போட்டிகள் நடக்கும்போதே நடக்கவிருக்கிறது. இதில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடப்பதும் கவனிக்கத்தக்கது.
Trent Bridge to kick off the 2027 men''s Ashes as England hosts Australia
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.