FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சொந்த மண்ணில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியா..! ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி குறித்து...

20 வினாடிகள் முன்பு
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சோனி பேக்கருடன் ஹாரி புரூக் - படம்: இசிபி
பகிர்:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி காலை 9 மணிக்கு தொடங்கி 4.31 மணிக்குள் முடிவடைந்தது.

கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து, 2-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Advertisement

Advertisement

டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து 48.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் 132 ரன்கள் குவித்தார். ஜேக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மாட் ரென்ஷா 57 ரன்களும் சோனி பேக்கர் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முதல் போட்டியில் ஆஸி. வெல்ல, இரண்டாவது மற்றும் கடைசி போட்டியில் இங்கிலாந்து வென்று, தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்றது. அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் வரவிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியான சறுக்கலில் இருக்கின்றன.

summary

Australia defeated in the final match..! England wins the ODI series!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.