மாலி பியர்ட்மேன் 6 விக்கெட்டுகள்..! 131 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து...
ஆஸ்திரேலியாவின் பெர்த் கிரிக்கெட் திடலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன. முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Advertisement
Advertisement
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்த அணியில் கஸ் அட்கின்சன் 29, வில் ஜாக்ஸ், டாம் பான்டன் தலா 25 ரன்கள் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலியா சார்பில் அறிமுக வீரர் மாலி பியர்ட்மேன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இவருடன் சேர்ந்து ஸ்பென்சர் ஜான்சன் 3 விக்கெட்டுகள், சேவியர் பார்ட்லெட் 1 விக்கெட் எடுத்து அசத்தினார்கள்.
இங்கிலாந்தின் ஆறு பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்கள். அதில் இருவர் (சாம் கரண், லியாம் டாசன்) ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி நல்ல ஃபார்முக்கு திரும்பி வருவது அதன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.