முகப்பு

ஜேமி ஓவர்டன் 5 விக்கெட்டுகள்..! திணறும் ஆஸ்திரேலிய பேட்டர்கள்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி குறித்து...

ஜேமி ஓவர்டன் 5 விக்கெட்டுகள்..! திணறும் ஆஸ்திரேலிய பேட்டர்கள்!
ஜேமி ஓவர்டன் - படங்கள்: எக்ஸ் / இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
பகிர்:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று மதியம் இந்திய நேரப்படி 1.45 மணிக்குத் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் 11, ஜேக் பிரேசர் மெக்கர்க் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

ஷாம் ஹார்பர்- நிகில் சௌதரி சற்று நிதானமாக விளையாடி 26, 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். பின்னர் வந்த டிம் டேவிட், ஜோயல் டேவிஸ், பென் துவார்சியஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

Advertisement

Advertisement

13 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து சார்பில் ஜேமி ஓவர்டன் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

பந்துவீச்சு மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கிலும் ஓவர்டன் 2 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே ரசிகர்கள் ஓவர்டன் பங்களிப்புக்காக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய டி20 தொடரையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

summary

Jamie Overton takes 5 wickets..! Australian batters struggle!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.