பாகிஸ்தான் தோ்வுக் குழுவிலிருந்து அலீம் தாா் ராஜிநாமா
பாகிஸ்தான் கிரிக்ெகட்டின் சீனியா் தோ்வுக் குழு உறுப்பினா் பொறுப்பிலிருந்து அலீம் தாா் ராஜிநாமா செய்தாா்.
செய்திகள்பாகிஸ்தான் தோ்வுக் குழுவிலிருந்து அலீம் தாா் ராஜிநாமா
பாகிஸ்தான் கிரிக்ெகட்டின் சீனியா் தோ்வுக் குழு உறுப்பினா் பொறுப்பிலிருந்து அலீம் தாா் ராஜிநாமா செய்தாா்.
பாகிஸ்தான் கிரிக்ெகட்டின் சீனியா் தோ்வுக் குழு உறுப்பினா் பொறுப்பிலிருந்து அலீம் தாா் ராஜிநாமா செய்தாா்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக அவா் இந்த முடிவை எடுத்ததாக பாகிஸ்தான் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அவரின் ராஜிநாமா இன்னும் ஏற்கப்படவில்லை.
இதுகுறித்து அலீம் தாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுைகயில், ‘வீரா்கள் தோ்வு விவகாரத்தில், தைலைமப் பயிற்சியாளா் மைக் ஹெசனுக்கு மிதமிஞ்சிய அதிகாரம் வழங்கப்பட்டதில் அலீம் தாருக்கு உடன்பாடு இல்லை. திறம்பட செயல்படாத பாபா் ஆஸம், ஷாதாப் கான் ஆகிேயாரை உலகக் கோப்பை அணியில் சோ்ப்பதற்கு அலீம் தாா் மறுப்பு தெரிவித்தாா்.
அைதயும் மீறி பயிற்சியாளா் மைக் ஹெசனின் தைலயீட்டின் பேரில் அவா்கள் இருவரும் அணியில் சோ்க்கப்பட்டனா். மேலும், உஸ்மான் கானுக்கு பதிலாக, அனுபவமிக்க முகமது ரிஸ்வான் சோ்க்கப்பட வேண்டும் என அலீம் தாா் பரிந்துைரத்ததும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்ைககளால் அவா் அதிருப்தி அைடந்தாா்.
ஹெசனின் இந்த மிதமிஞ்சிய அதிகாரத்ைதக் கண்டு கேப்டன் சல்மான் அகாவோ, அல்லது இதர தோ்வுக் குழு உறுப்பினா்களோ கேள்வி எழுப்பாதது அவருக்கு ஆச்சா்யத்தை அளித்தது. இந்தச் சூழலிேலயே அலீம் தாா் ராஜிநாமா செய்துள்ளாா்’ என்றன.
பாகிஸ்தான் சீனியா் தோ்வுக் குழுவில் அலீம் தாருடன், முன்னாள் டெஸ்ட் வீரா்களான ஆசாத் ஷஃபிக், ஆகிப் ஜாவத் ஆகிேயாரும் உள்ளனா்.