முதுகுளத்தூர்,கடலாடியில் டெங்கு, கந்து வட்டி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் வியாழக்கிழமை கந்து வட்டிக்கொடுமை மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் வியாழக்கிழமை கந்து வட்டிக்கொடுமை மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் முதுகுளத்தூர் காவல்துறையினரும் பங்கேற்ற பேரணி முதுகுளத்தூர் காந்திசிலை முன்பு தொடங்கியது. பேரணியை முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பி.கே. ரவி துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மேக்டலின் மேகலா, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.சசிவர்ணம், என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேரிருவேலி முனைரோடு வழியாக பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது.
பேரணியில் மாணவர்கள் கந்துவட்டிக் கொடுமை ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு, சாலை விதிகளை கடைபிடித்தல், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்தல், புகையிலை ஒழிப்பு போன்றவை தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பிச் சென்றனர். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் வரவேற்றார். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், ஜே.ஆர்.சி ஆசிரியர்கள் தனம்,ராஜபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
இதே போன்று கடலாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், காவல்துறையினரும் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிக்கு கடலாடி காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பொ செல்வராணி, சார்பு ஆய்வாளர் சுந்தரபாண்டி,என்.எஸ்.எஸ்.திட்ட ஒருங்கிணைப்பாளர் சொக்கர் ஆகியோர் முனனிலை வகித்தனர்.