ராமநாதபுரம்

குடிசை மாற்று வாரிய வீடுகளில் அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பட்டணம் காத்தான் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 பட்டணம் காத்தான் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் கே.கார்த்திகேயன்,செயலாளர் ஆர்.என்.செல்லத்துரை,பொருளாளர் பி.காளிதாஸ் மற்றும் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் இ.கண்ணகி ஆகியோர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இம்மனுவை அளித்தனர். 
மனுவில் குடிநீர்வசதி ஏற்படுத்துதல், எரியாத தெரு விளக்குளை எரியச் செய்தல், கழிவுநீரை குடியிருப்பு பகுதியில் வந்து கொட்டுவதை தடுத்து நிறுத்துதல்,இரவு நேரத்தில் நடக்கும் வழிப்பறியைதடுத்து நிறுத்துதல் போன்றகோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT