ராமநாதபுரம்

கமுதியில் இணைய சேவை முடக்கம்: பட்டா பெறுவதில் சிக்கல்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஒரு வாரமாக அரசு இணைய சேவை பழுதால் கமுதி வட்டாட்சியர் அலுவலகம் , தனியார் கணினி மையங்கள்  உள்ளிட்டவைகளில் கணினி பட்டா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு பயனாளிகள், விவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு நவ. 30-க்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய காப்பீட்டு நிறுவனங்கள், தேசிய மயமாக்கபட்ட வங்கிகளில் ஏக்கருக்கு ரூ. 21 ஆயிரம் காப்பீட்டுத் தொகை பெற, ஏக்கருக்கு ரூ. 322 பிரீமியத் தொகை செலுத்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் தனியார் கணினி மையங்களிலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் ரூ. 20 செலுத்தி, கணினி பட்டா பெற விண்ணப்பித்தனர்.
இருந்தபோதிலும் கடந்த ஒரு வாரமாக அரசு இணையச் சேவை பழுதால், கணினி பட்டா பெற முடியாமல், பயிர்க்காப்பீட்டுக்கு பிரீமியத் தொகை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அரசு இணைய சேவை முடக்கத்தால் கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், தனியார் கணினி மையங்களுக்கு விவசாயிகள் நாள்தோறும் அலைந்த வண்ணம் உள்ளனர். இதற்காக தங்களது அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
பிரீமியம் செலுத்த இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ளதால், முடங்கிக் கிடக்கும் இணைய சேவையை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமுதி பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT