ராமநாதபுரம்

கமுதியில் ஆசிரியர்கள் சங்க  மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

DIN

அனைத்து தரநிலையிலுள்ள ஆசிரியர்களை கொண்ட புதிய ஆசிரியர்கள் சங்கக் கூட்டணி கமுதியில் தொடங்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.
நிர்வாகிகள் தேர்வு மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமையிலும், நிறுவனர் ராமச்சந்திரன் முன்னிலையிலும் கமுதி அரசுமேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள ஆசிரியர்களுக்காக 3-க்கும் மேற்பட்ட ஆசிரியர் கூட்டணி சங்கங்களும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை என அனைத்து தரப்பினருக்கும் கருத்து வேற்றுமையால் பல்வேறு சங்கங்களை உருவாக்கி சிலரின் சுய லாபத்திற்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்துத்தர நிலையிலுள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் புதிய ஆசிரியர் கூட்டணியான "யுனைடெட் டீச்சர்ஸ் யூனியன்' எனும் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட அளவில் ஞாயிற்றுக்கிழமை கமுதியில் தொடங்கப்பட்டது.
இந்த ஊராட்சி ஒன்றியத்தின் புதிய மாவட்டத் தலைவராக முருகவேல், செயலாளராக முத்துராமலிங்கம், பொருளாளர் சீனிவாசன் போட்டியின்றி தேர்வு செய்யபட்டனர். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, தலைமை ஆசிரியர் வெள்ளைச்சாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT