ராமநாதபுரம்

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மணல் திருட்டு

DIN

திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் திருடப்பட்டுள்ளது.
     திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில், சில தினங்களுக்கு முன் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட அனுமதியின்றி அள்ளப்பட்ட மணல் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாடானை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த மணலை, திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.     அதன்படி, வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 லாரி மணல்கள் கொட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், புதன்கிழமை இரவு இந்த மணலை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.     இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT